செவ்வாய், 19 ஜனவரி, 2010

ஆதாரங்கள் இன்மையால் மருத்துவர்கள் ஐவரும் விடுதலை..!!

வன்னியில் இறுதி மோதல்களின் போது புதுமாத்தளன் மருத்துவமனையில் கடமையாற்றிய மருத்துவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரங்கள் முன்வைக்கப் படவில்லை என்று அவர்கள் அனைவரையும் கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது.
முல்லைத்தீவு மருத்துவமனையில் கடமையாற்றிய டாக்டர் சத்திய மூர்த்தி, டாக்டர் வரதராஜா, டாக்டர் சண்முகராஜா, டாக்டர் இளஞ்செழியன், டாக்டர் வல்லவன் உட்பட்ட மருத்துவ உதவியாளர் கேதீஸ்வரன் ஆகியோர் நீதிமன்றிற்கு சமூகமளித்திருந்தனர்.
கடந்த ஓகஸ்ட் மாதம் பிணையில் விடுதலையாகியிருந்த இவர்களுக்கு வாரந்தோறும் காவல் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் என்றும், நீதிமன்ற தவணைகளுக்கு தவறாது சமூகமளிக்க வேண்டுமென்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
இறுதிக்கட்ட போர் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் ஊடகங்களுக்கு போர் நிலவரம் தொடர்பாக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் தகவல் வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை நிரூபிக்க காவல்துறை தவறியதனால் இவர்களை விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக