செவ்வாய், 19 ஜனவரி, 2010
கொல்லப்பட்ட ஆதரவாளருக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்..!!
புத்தளம் பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் வன்முறை ஒன்றில் கொல்லப்பட்ட 19 வயதுடைய ஐக்கிய மக்கள் முன்னணியின் ஆதரவாளருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது இறுதி அஞ்சலியைச் செலுத்தியுள்ளார். ஆனமடுவ, தொனிங்கலவில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று பிற்பகல் சென்ற ஜனாதிபதி குடும்பத்தவர்களுக்கு தனது ஆறுதலை தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டமொன்றுக்கு சென்றுகொண்டிருந்த ஆதரவாளர்கள் வழியில் காணப்பட்ட ஜெனரல் சரத் பொன்சேகாவின் கட்டவுட் ஒன்றை உடைத்தபோது அதைப் பார்த்துக்கொண்டிருந்த இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே குறிப்பிட்ட இளைஞன் கொல்லப்பட்டுள்ளான்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக