திங்கள், 4 ஜனவரி, 2010
கிளிநொச்சியை கைப்பற்றிய ஆண்டுவிழா..!!
விடுதலைப் புலிகளிடம் இருந்து இலங்கை ராணுவம் கிளிநொச்சி நகரை கைப்பற்றியதன், முதலாம் ஆண்டு விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகராக விளங்கிய கிளிநொச்சியை, கடந்தாண்டு, ஜனவரி 2ம் தேதி, இலங்கை ராணுவம் கைப்பற்றியது. விடுதலைப் புலிகள் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டதற்கு முக்கிய காரணமாக இது அமைந்தது. இதன் முதலாம் ஆண்டு விழா, நேற்று முன்தினம் இலங்கை ராணுவத்தால் கொண்டாடப்பட்டது. புலிகளிடம் இருந்து கிளிநொச்சியை கைப்பற்றிய 180 நாட்களில், அந்த நகரத்தை சீரமைத்து, மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக, இலங்கை அரசு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக