திங்கள், 4 ஜனவரி, 2010

மகிந்த ராஜபக்சவுக்கே வாக்களிக்க வேண்டும் என அதிரடிப் படையினருக்கு அறிவுறுத்தல்..!!

எதிர்வரும் ஐனாபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கே வாக்களிக்க வேண்டும் என விசேட அதிரடிப் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுதொடர்ப்பில் டிசம்பர்மாதம் அதிரடிப்படையினருக்கு விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதியினால் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. படையினருக்கு மரியாதை ஏற்படுத்தியவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே. என்றும் பயங்கரவாதிகளை நடவடிக்கைமூலம் அழித்து நாட்டின் இறைமையை பாதுகாத்தவர் அவரேயென்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்துண்டுப்பிரசுரம் யாரால் வெளியிடப்பட்டுள்ளது என்பது தொடர்பில் எதுவித ஆதாரங்களும் இல்லாததால் அதனை வெளியிட்ட அதிரடிப்படைக் கட்டளைத்தளபதி தனது கையெழுத்துடன் துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டவில்லை என மறுத்துள்ளார். இதுபற்றி எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா பொலீஸ் மாஅதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை பொலீசாரும் மகிந்த ராஜபக்சவுக்கே வாக்களிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நேற்று தகவல்கள் வெளிவந்திருந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக