செவ்வாய், 5 ஜனவரி, 2010

67 வயதில் தென்னாப்பிரிக்க அதிபர் 5வது திருமணம்..!!

தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஸூமா தனது 67வது வயதில் 5வது மனைவியை திருமணம் செய்துள்ளார். தோபியா மடிபா என்ற இந்த 37 வயது புது மனைவியுடன் அதிபர் ஏற்கனவே குடும்பம் நடத்தி வந்தார். மூன்று குழந்தைகளும் உள்ளனர். தற்போது இவர்களது திருமணம் தென்ஆப்பிரிக்க நாட்டின் பாரம்பரிய முறைப்படி நடந்துள்ளது. காண்ட்லா நகரில் கொட்டும் பனியில் நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் கிராம பெரியவர்களும், பொதுமக்களும் உறவினர்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர். குறிப்பாக அதிபரின் முதல் இரண்டு மனைவிகளும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரிசுகளும் தந்தனர். அதிபர் ஜேக்கப்புக்கு கடந்த 1973ம் ஆண்டு சிஷா கிள் குமாலோ என்ற பெண்ணுடன் முதன்முறையாக திருமணம் நடந்தது. இவரை தொடர்ந்து நொம்பு மெலோலா என்பவர் 2வது மனைவியானார். மூன்றாவதாக மணந்துகொண்ட மனைவி தற்கொலை செய்து கொண்டார். 4வது மனைவி லாமினி என்பவரை திருமணம் செய்து பின்னர் அதிபர் விவாகரத்து செய்துவிட்டார். தற்போது இவர் தென்ஆப்பிரிக்காவில் உள்துறை மந்திரியாக இருக்கிறார். 5 மனைவிகளின் மூலம் அதிபருக்கு மொத்தம் 18 குழந்தைகள் உள்ளனர். தற்போது மூன்று மனைவிகளுடன் குடும்பம் நடத்தி வரும் அதிபர் அடுத்ததாக 6வது திருமணத்துக்கும் முயற்சி செய்வதாக தகவல் வெளியாகின்றன. அதிபர் சார்ந்துள்ள ஸூலு சமுதாயத்தில் பல தாரங்களை மணப்பது சம்பிரதாய வழக்கமாகக் கருதப்படுகிறது. ஆனால் இன்றைய நவீன யுகத்திலும் இந்த பாரம்பரியத்தை அதிபர் பின்பற்றி வருவது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக