வெள்ளி, 15 ஜனவரி, 2010
தனங்கிழப்பிலிருந்து கேரதீவுவரை மக்கள் குடியேற அரசாங்கம் அனுமதி..!!
யாழ். தென்மராட்சி தனங்கிழப்பிலிருந்து கேரதீவு வரையிலான பகுதிகளில் மக்கள் மீள்குடியேறுவதற்கு அரசாங்கம் இன்றுமுதல் அனுமதி வழங்கியுள்ளது. இந்த அறிவித்தலைத் தொடர்ந்து அப்பிரதேச மக்கள் அங்கு சென்று தமது இடங்களைப் பார்வையிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அறுகுவெளி என்ற பிரதேசத்தில் 640 ஏக்கர் விவசாய நிலங்களையும் பாதுகாப்பு தரப்பினர் விவசாய நடவடிக்கைகளுக்காக விடுவித்துள்ளதாகவும் தெரியவருகின்றது. தனங்கிழப்பு பகுதியில் 1420ஏக்கர் விவசாய நிலங்களை ஏற்கனவே அரசாங்கம் விடுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை அங்குள்ள கடற்தொழிலாளர்கள் தங்களை மீண்டும் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அனுமதிக்க வேண்டுமென்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக