வெள்ளி, 15 ஜனவரி, 2010
பொய்கூறி ஏமாற்றுவோரை மக்கள் நம்பக்கூடாது -நிட்டம்புவையில் ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவிப்பு..!!
வெறும் பொய்களை மட்டும் கூறி மக்களை ஏமாற்றிவரும் அரசியல்வாதிகளை நம்பி ஏமாற வேண்டாம் எனத் தெரிவித்துள்ள எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா எந்தவொரு முக்கியமான தீர்மானம் எடுக்கும் போதிலும் முதலில் நாட்டை பற்றிச் சிந்திக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். நிட்டம்புவையில் நேற்றுமாலை இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். நான் என்னுடைய கொள்கைகளை மிக எளிதான முறையில் முன்வைத்துள்ளேன் உங்களைத் திசைதிருப்புவதற்காக பொய் வாக்குறுதிகளை வழங்கவில்லை அவ்வாறான வாக்குறுதிகளைக் கேட்டும் பார்த்தும் ஏமாற வேண்டாம். சுயநலங்களைத் தவிர்த்து நாட்டுக்காக செயற்படுபவர்கள் யாரென்பதை இனங்காண வேண்டும் நீங்கள் தீர்மானம் எடுக்கும் போது நாட்டைபற்றி முதலில் சிந்திக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக