வியாழன், 14 ஜனவரி, 2010
இனிவரும் காலங்களில் பாஸ்போர்ட் விண்ணப்பம் ஆங்கிலத்தில் மட்டும்..!!
இலங்கை கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இனிமேல் ஆங்கிலத்தில் மட்டுமே படிவங்களை நிரப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிலிருந்து இந்நடைமுறை வருவதாகவும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது. தமிழில் அல்லது சிங்களத்தில் படிவங்களை நிரப்பும் போது பல சிக்கல்கள் எழுந்துள்ளதால் இனி ஆங்கிலத்தில் மட்டுமே நிரப்ப வேண்டும் என கட்டாயமாக்கப் பட்டுள்ளது. ஏனெனில் விண்ணப்ப படிவத்தில் உள்ள விபரங்களை கணனியில் பதியும் போது அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் போது சில அனாவசிய சிக்கல்கள் ஏற்படுவதாகவும் அவற்றைத் தவிர்க்கும் பொருட்டே இந்த நடைமுறை வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் படிவங்களை நிரப்புவதற்கு வேண்டிய வழிமுறைகள் அனைத்தும் தமிழிலும் சிங்களத்திலும் விண்ணப்பதாரிக்கு வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக