வியாழன், 14 ஜனவரி, 2010

பொங்கல் வாழ்த்துச் செய்தி - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா..!!

பொங்கலோடு சேர்ந்து மகிழ்ச்சியும் பொங்கட்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். மேலும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவது அகதிகள் என்ற அவலமும் இடப்பெயர்வு என்ற இன்னலும் இந்தப் பொங்கலோடு இல்லாமல் போகட்டும். இழந்த உரிமைகளை மீளப் பெற்றோம். இனி எங்கள் வாழ்வில் அமைதி தங்கட்டும். வேட்டோசைகள் ஓய்ந்த எங்கள் தேசத்தில் கௌரவமான அரசியல் உரிமைகளோடு முகமுயர்த்தி வாழ்வோம். இழந்த உயிர்களை தவிர ஏனைய எல்லாவற்றையும் ஓரணி திரண்டு வென்றெடுப்போம். ஜனநாயகம் எங்கள் பயணம். நடைமுறைச் சாத்தியமான வழியில் நமது உரிமைகளையும் வாழ்வையும் வெல்வோம். அந்த வெற்றியை எந்நாளும் பாதுகாப்போம். இந்த உறுதியை இதயத்தில் ஏற்றியவர்களாக மகிழ்ச்சியோடு தைத்திருநாளைக் கொண்டாடி மகிழ்வோம். நம்பிக்கையோடும், துணிச்சலோடும் தைப்பொங்கலைக் கொண்டாடும் அனைவருக்கும் தனது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக