தமிழர் தினமாம் பொங்கல் பண்டிகையினை கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும் என் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
உலகெங்கிலும் பரந்து வாழ்கின்ற தமிழ் மக்களின் முக்கியபண்டிகைகளுள் இத் தைத்திருநாளானது வெறும் ஒரு சடங்கான பண்டிகை அல்ல மாறாக அர்த்தங்கள் பொதிந்த வழிகாட்டியாக அமைகின்ற ஒரு பண்டிகை ஆகும்.” நன்றி மறப்பது நன்றன்று” என்ற திருவார்த்தை செயலுருபம் கொடுக்கும் ஒரு தத்துவம் மிக்க பண்டிகை ஆகும்.
இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களை பொறுத்த வரையில் கடந்த பல வரடங்களாக பொங்கல் பண்டிகையானது மகிழ்ச்சியற்ற, நிம்மதியற்ற, இரத்தம் துவைந்த ஒன்றாகவே அமைந்தது. ஆயுத அடக்கு முறகை;குள் அடக்கப்பட்டிருந்த மக்களினால் பொங்கல் பண்டிஎகை அல்ல வேறெந்த பண்டிகைகளையும் நினைத்தப்பார்க்க முடியவில்லை. ஆனால் இம்முறை மலர்ந்திருக்கும் பொங்கல் திருநாளானது ஒப்பீட்டு ரீதியில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு பண்டிகை என்றால் அது மிகையல்ல.
இதனைவிட தமிழ் மக்களால் அரசியல் வாழ்விலும் முக்கியமான காலகட்டத்திலேயே இப்பண்டிகை மலர்கின்றது. அடக்குமுறையற்ற தமிழ் மக்கள் தனது அரசில் அபிலாசைகளையும் அபிவிருத்தியும் பெற்றுக்கொண்டு ஒன்றுபட்ட இலங்கைக்குள் தனித்துவமான வாழ்வொன்றை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு அவர்கள் முன் காத்திருக்கின்றது. நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தல் அதற்கான சந்தர்ப்பம் ஆகும். இவ்விரு சந்தர்ப்பங்களையும் உரிய முறையில் தீர்க்க தரிசனத்தோடு தம் விடிவுக்காக எம் மக்கள் பயன்படத்த வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக