புதன், 27 ஜனவரி, 2010

நிறைவேற்று அதிகாரமுடைய ஆறாவது ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச தெரிவு..!

இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் முடிவடைந்து அதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் 57.88சத வீத வெற்றியினை ஈட்டியுள்ளார். இதன் பிரகாரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் 60லட்சத்து 15ஆயிரத்து 934வாக்குகளையும், புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா 41லட்சத்து 73ஆயிரத்து 185வாக்குகளையும் மொத்தமாகப் பெற்றுள்ளனர். அவர் வாக்குப்பெற்ற வீதமானது 40.15வீதமாகும். இதன்படி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் அமோக வெற்றியீட்டியுள்ளார். அவர் தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதியாக 02வது தடவையும் தெரிவானதை தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க இன்றுமாலை செய்தியாளர்களிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதியாக தெரிவாவதற்கு தேவைப்பட்ட 50வீத வாக்குகளுக்கும் மேற்பட்ட வீதத்தை மகிந்த ராஜபக்ச பெற்று வெற்றியீட்டினார். இதனடிப்படையில் 18,42,749 மேலதிக வாக்குகளைப் பெற்று மகிந்த ராஜபக்ச வெற்றிபெற்றுள்ளார். நாட்டின் வன்னி மாவட்டம் உள்ளிட்ட 22மாவட்டங்களில் நடத்தப்பட்ட தேர்தலில் 16 மாவட்டங்களில் மகிந்த ராஜபக்சவும், 06மாவட்டங்களில் சரத் பொன்சேகாவும் முன்னிலை பெற்றிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக