திங்கள், 4 ஜனவரி, 2010

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு பிரிவான தமிழரசுக்கட்சி ஜெனரல் சரத்பொன்சேகாவை ஆதரிக்கத் தீர்மானம்..!!

எதிர்வரும் ஜனவரி 26ல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத்பொன்சேகாவை ஆதரிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுள் ஒன்றான தமிழரசுக்கட்சி தீர்மானித்துள்ளது. இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு பிரிவான ரெலோவைச் சேர்ந்த எம்.கே.சிவாஜிலிங்கம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இன்னொரு பிரிவான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி யாழ்ப்பாணத்தில் கூடி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைப் பகிஸ்கரிப்பதற்கு முடிவெடுத்து தேர்தலைப் பகிஸ்கரிக்கும்படி அங்கு மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கிறார்கள் என்பது ஏற்கனவே அறிந்ததே. இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு சிவாஜிலிங்கம், கிஷோர், ஸ்ரீகாந்தா ஆகியோர்க்கு அழைப்புவிடுக்காத போதிலும் சிவாஜிலிங்கம் தவிர்ந்த ஏனைய இருவரும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக