திங்கள், 4 ஜனவரி, 2010
ஐ.தே.கட்சி அலுவலகத்தின் மீது குண்டுத்தாக்குதல்..!!
கட்டானைப் பிரதேசத்திற்கான ஐக்கிய தேசியக் கட்சியின் காரியாலயம் மீது குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டானைப் பிரதேச அமைப்பாளர் ரோசே பெர்ணாந்து தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை 4.00 மணியளவில் சிவப்பு நிற கப் ஒன்றில் வந்திறங்கிய நபர்கள் அலுவலகத்தின் மீது குண்டினை வீசியதாக தெரிவித்துள்ள அவர் இத்தாக்குதல் நடாத்தப்பட்டபோது காரியாலயத்தில் 7 பேர் இருந்தாகவும் தெரிவித்துள்ளார். காரியாலயத்தில் தங்கியிருந்தவர்கள் தாக்குதல் மேற்கொண்டோரை இனம் கண்டுகொண்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள ரோசே பெர்ணாந்து, காரியாலயத்தில் இருந்த கணனிகள் , காரியாலய உபகரணங்கள் மற்றும் கூரை என்பன முற்றாக நாசமாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக