செவ்வாய், 5 ஜனவரி, 2010

இடைத்தங்கல் முகாம்களாக பயன்படுத்தப்பட்டு வந்த 17பாடசாலைகள் நேற்றுமுதல் ஆரம்பம்..!!

வவுனியாவில் இடைத்தங்கல் முகாம்களாக பயன்படுத்தப்பட்டு வந்த 17பாடசாலைகளில் நேற்றுமுதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நிவாரணக் கிராமங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த அனேகமானோர் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டதையடுத்து இந்த 17 பாடசாலைகளும் மீண்டும் கல்வியமைச்சிடம் கையளிக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர்ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார். வவுனியா, ஓமந்தை பகுதியிலுள்ள ஒரு பாடசாலை மாத்திரமே படை நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்கியிருந்த மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 4ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பாடசாலைக்கு நேற்றைய தினம் சென்றதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக