திங்கள், 4 ஜனவரி, 2010
புலிகளின் வலயமைப்பிற்கு இராணுவ இரகசியங்கள் கிடைக்கப்பெற்றமை தொடர்பில் விசாரணை -திவயின தெரிவிப்பு..!!
இராணுவ இரகசியங்கள் புலிகளின் சர்வதேச வலயமைப்பிற்கு எவ்வாறு கிடைக்கப்பெற்றதென்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது யுத்தகாலத்தில் மிகவும் இரகசியமாக பேணப்பட்ட விஷேட இராணுவப்பிரிவுகள் தொடர்பான தகவல்கள் புலிகளுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொல்ப், ரோமியோ, ஏகே மற்றும் டெல்டா ஆகிய நான்கு விஷேட இராணுவப் பிரிவுகள் மற்றும் அதன் உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள் அம்பலமாகியுள்ளதாக புலனாய்வு தகவல்களை ஆதாரம் காட்டி திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. யுத்த இரகசியங்களை வெளியிட்ட தரப்பினர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக சிரேஷ்ட இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வன்னி இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட குறித்த விஷேடப் பிரிவுகள் தொடர்பிலான தகவல்கள் மிகவும் இரகசியமாக பேணப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக