திங்கள், 4 ஜனவரி, 2010
சரத்பொன்சேகாவின் பாதுகாப்பு அதிகாரிகள் பொலிஸாரால் கைது..!!
யாழ்ப்பாணத்தில் பிரச்சாரங்களை மேற்கொள்ளச் சென்றிருந்த எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத்பொன்சேகாவின் பாதுகாப்பு பிரிவினர் சிலர் அங்கிருந்து வவுனியா சென்ற போது பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது தேர்தல் பிரச்சாரத்தை வவுனியாவில் நடத்த திட்டமிட்டுள்ளார் சரத்பொன்சேகா அதன் நிமிர்த்தம் பிரச்சாரத்துக்கான இடங்களை ஒழுங்குபடுத்தும் நோக்கில் அவரின் பாதுகாப்பு அதிகாரிகள் நேற்றுமுன்தினம் பஸ் ஒன்றில் யாழிலிருந்து வவுனியா சென்ற போதே வழியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் சட்டவிரோத ஆயுதங்கள் உள்ளனவா? என அவர்களை தடுத்து வைத்திருந்த போது பொலிஸார் சோதனை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பாதுகாப்பு அதிகாரிகள் பின்னர் விடுவிக்கப்பட்ட போதும் அவர்களை தாமதப்படுத்தி சரத்பொன்சேகாவின் பிரச்சாரத்தை குழப்புவதே பொலிஸாரின் நோக்கமாகும் என சரத்பொன்சேகாவின் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை சரத் பொன்சேகாவின் உயிருக்கு தற்போது அச்சுறுத்தல் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக