ஞாயிறு, 17 ஜனவரி, 2010
பிரபாகரனின் மாமியாரை மாலைதீவில் வைத்து உறவினர்களிடம் ஒப்படைத்த சிவாஜிலிங்கம் எம்.பி..!!
மாலைதீவில் இடம்பெற்ற புலம்பெயர் நாடுகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் எதிர்வரும் ஜானாதிபதித் தேர்தல் குறித்தும் தமது நிலைப்பாடு குறித்தும் கலந்துரையாடியதாக ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். நேற்றுமாலை மாலைதீவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம் இன்றுகாலை நாடு திரும்பியுள்ளதுடன், தற்போது மலையகத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்கு செல்லவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதன்போது தமது நிலைப்பாட்டிற்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள பிரதிநிதிகள் ஆதரவு வழங்கியுள்ளதாகவும், இதுகுறித்து விரைவில் சாதகமான அறிக்கை விடுவதாகவும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை மாலைதீவில் வைத்து பிரபாகரனின் மனைவியான மதிவதனியின் தாயார் ஏரம்பு சின்னம்மாவை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்து உள்ளதாகவும், அவர் தற்போது சிங்கப்பூர் சென்று அங்கிருந்து அவது பிள்ளைகளுடன் இணைவார் என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக