திங்கள், 4 ஜனவரி, 2010
பயணிகளை 4 மணித்தியாலங்களுக்கு முன்னர் வருமாறு பண்டாரநாயக சர்வ தேச விமான நிலையம் கோருகின்றது..!!
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணம் செய்யவுள்ள பிரயாணிகளை பயணநேரத்திலிருந்து சுமார் நான்கு மணித்தியாலயங்கள் முன்னர் விமான நிலையத்திற்கு வருமாறு சிறிலங்கன் எயார்லைன் கேட்டுள்ளது. விமான நிலைய ஊழியர்கள் மேற்கொண்டுள்ள பகிஸ்கரிப்பினால் விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள சேவை தாமதம் காரணமாக ஏற்படக்கூடிய நெருக்கடியை தவிர்கும் பொருட்டே இவ் முன்னறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. விமான நிலைய நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் பி.வி அபயக்கோண், சம்பளஉயர்வு உட்பட மூன்று நிபந்தனைகளை வைத்து ஊழியர்கள் பகிஸ்கரிப்பினை மேற்கொண்டுள்ளதாகவும் , அவற்றில் ஒரு நிபந்தனைக்கு ஏலவே தீர்வு காணப்பட்டுள்ளதுடன் , தொழற்சங்கத்தினர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் சாத்தியமான முடிவுகள் எட்டப்படும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளதுடன் , விமான நிலைய சேவைகளில் ஏற்பட்டுள்ள தாமத்திற்காக தனது மன வருத்தத்தினையும் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக