திங்கள், 4 ஜனவரி, 2010
பருத்தித்துறையிலிருந்து கொழும்புக்கு நேரடி பஸ்சேவை ஆரம்பம்..!!
யாழ். பருத்தித்துறையிலிருந்து கொழும்புக்கு இலங்கைப் போக்குவரத்து சபை நேரடி பஸ் சேவையொன்றை ஆரம்பித்துள்ளது. இந்த பஸ்சேவை காலை 7மணிக்கு இடம்பெறுகின்றது. பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பஸ்சேவைகள் அதிகரிக்கப்படுமென பருத்தித்துறை சாலையின் இ.போ.ச அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்திலிருந்து தினசரி 16 இ.போ.ச பஸ்களும், 15தனியார் பஸ்களும் கொழும்பிற்கான நேரடி பஸ் சேவைகளை நடத்தி வருகின்றன. இதேவேளை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தினகரன் அதிசொகுசு பஸ்சேவை நாளைமுதல் ஆரம்பமாகிறது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான முதலாவது பஸ் நாளை இரவு 11.00மணிக்கு புறப்படுகிறது. ஆசன முன்பதிவுகளுக்கு லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தொலைபேசி இலக்கம் 011-2429673 ஆகும். யாழ்ப்பாணத்தில் 021-2225361 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு பதிவு செய்துகொள்ளலாம். ஒருவழிப் பயணக்கட்டணமாக 1800ரூபா அறவிடப்படும். இருவழிக்கும் ஆசனப்பதிவு மேற்கொண்டால் 5வீத கட்டணக் குறைப்பும் வழங்கப்படவுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக