திங்கள், 4 ஜனவரி, 2010
கிளிநொச்சி மாவட்டத்தின் ஐந்து பாடசாலைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை..!!
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள ஐந்து பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியினால் நாளைதினம் இப்பாடசாலைகள் திறந்து வைக்கப்படவுள்ளன. கிளிநொச்சி கரைச்சி கல்விக் கோட்டத்திற்குட்பட்ட ஐந்து பாடசாலைகளே இவ்வாறு திறக்கப்படவுள்ளன. கிளிநொச்சி இந்து வித்தியாலயம், புனித பாத்திமா றோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலை, கனகபுரம் மகாவித்தியாலயம், புனித திரேசா வித்தியாலயம் உள்ளிட்ட ஐந்து பாடசாலைகளே நாளை திறந்து வைக்கப்படவுள்ளன. இதற்கான நிகழ்வு நாளைகாலை கிளிநொச்சி இந்து வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது. யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த கிளிநொச்சி மாவட்ட மக்கள் பூநகரி மற்றும் கரைச்சி ஆகிய பகுதிகளில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். இதனையடுத்தே கரைச்சி கல்விக் கோட்டத்திற்குட்பட்ட ஐந்து பாடசாலைகள் நாளை திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக