ஞாயிறு, 3 ஜனவரி, 2010
கிரிக்கெட் அணியின் ஜயசூரிய, முத்தையா முரளிதரன், குறுந்தூர ஓட்ட வீராங்கனை ஆகியோர்க்கு ஜனாதிபதி விருது வழங்கினார்..!!
நாட்டிலுள்ள இளைஞர் யுவதிகளின் எதிர்காலம் தொடர்பாக தான் அவதானத்துடன் செயற்படுவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று இன்று கொழும்பு டொரிங்டன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இதன்போது இலங்கைக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சனத் ஜயசூரிய, நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் மற்றும் குறுந்தூர ஓட்ட வீராங்கனை உள்ளிட்ட பலரும் விருதுவழங்கி ஜனாதிபதியால் கௌரவிக்கப்பட்டனர். அங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, கிராமப்புற வீரர்கள் பெறும் பதக்கங்கள் வெளியுலகத்திற்கு தெரியாதிருந்தகாலம் மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக