செவ்வாய், 19 ஜனவரி, 2010

புலிகளின் வங்கிக் கணக்குகளை முடக்கவில்லை -புலனாய்வுத்துறை தகவல்..!!

விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான 600வங்கிகணக்குகள் இருந்தன எனவும் அவற்றிலிருந்த பணத்தை அரசாங்கம் தனது உடமையாக்கி தவறாக பயன்படுத்தி வருகிறது என்றும் எதிர்கட்சியினர் தமது பிரச்சாரங்களில் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இவையாகும் எதிர்கட்சியினரால் சித்தரிக்கப்பட்ட பொய் குற்றச்சாட்டுகள் என நேற்றுமுன்தினம் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் தோன்றிய இலங்கை புலனாய்வுத் துறையின் தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹெண்ட விதாரண தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்டில் வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட புலிகளின் தலைவர் கே.பி.யை விசாரணை செய்த போது புலிகளுக்குச் சொந்தமான 600வங்கிக கணக்குகளும் 5கப்பல்களும் உள்ளதாக அவர் தெரிவித்ததாக கூறியதாக முன்னர் செய்திகள் வெளிவந்திருந்தமை குறிப்பிடதக்கது. இந்த கணக்குகளைச் செயலிழக்கச் செய்ய அரசாங்கம் விரும்புகிறது ஆனால் அவற்றின் விபரங்கள் தெரியவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இப்போது மேற்படி புலிகளுக்குரிய வங்கிக் கணக்குகள் மற்றும் கப்பல்கள் குறித்த விபரங்களையும் அவற்றுக்கு என்ன நடந்தது என்பதையும் பொதுவில் அறிவிக்க வேண்டும் என்று தமது தேர்தல் பிரச்சாரங்களில் எதிர்கட்சியினர் கேட்டு வருகின்றனர் இவற்றை பொய்யான பிரச்சாரம் எனக் கண்டனம் தெரிவித்துள்ள கபில ஹெண்டவிதாரண புலிகளி;ன் சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துவது என்பது அடிப்படையற்ற உண்மைக்கு முரணான செய்தி எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக