எந்த சந்தர்ப்பத்திலும் நாட்டின் இறைமையைக் காட்டிக்கொடுக்கப் போவதில்லையென எதிர்க்கட்சி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்காத வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தானே போராடி மீட்டுத்தந்ததன் பின்னர் அதனை பிரிக்க தாமே முன்நின்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த இரண்டு மாகாணங்களையும் மீள இணைக்கும் அவசியப்பாடு தமக்கில்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் தாம் இனத்தையோ தேசத்தையோ காட்டிக்கொடுக்கப் போவதில்லையென அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தம்மீது முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகள் போலியானவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஞாயிறு, 10 ஜனவரி, 2010
வடக்கு கிழக்கை மீள இணைக்கும் அவசியப்பாடு இல்லை -ஜெனரல் சரத் பொன்சேகா..!!
எந்த சந்தர்ப்பத்திலும் நாட்டின் இறைமையைக் காட்டிக்கொடுக்கப் போவதில்லையென எதிர்க்கட்சி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்காத வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தானே போராடி மீட்டுத்தந்ததன் பின்னர் அதனை பிரிக்க தாமே முன்நின்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த இரண்டு மாகாணங்களையும் மீள இணைக்கும் அவசியப்பாடு தமக்கில்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் தாம் இனத்தையோ தேசத்தையோ காட்டிக்கொடுக்கப் போவதில்லையென அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தம்மீது முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகள் போலியானவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக