செவ்வாய், 5 ஜனவரி, 2010

ஜேவிபி யின் அரசிற்கு எதிரான ஆர்ப்பாட்ட ஊர்வலம் எவ்வித தடையுமின்றி இடம்பெற்றது..!!

அரசினால் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டப்படுகின்ற ஊழல்கள் , சட்டவிரோத கொலைகள் , அதிகார துஸ்பிரயோகம் என்பவற்றுக்கு எதிராக ஜேவிபியினரால் மேற்கொள்ளப்படவிருந்த ஆர்ப்பாட்ட பேரணியை தடுப்பதற்கு பொலிஸார் நீதிமன்றினை நாடியிருந்தபோதும் , பொலிஸாரின் முயற்சி நிறைவேறாத நிலையில் ஆர்ப்பாட்டம் மிகுந்த சனத்திரளுடன் நடைபெற்றுள்ளது. ஜேவிபி ஆதரவாளர்களுடன் ராஜகிரிய ஆயுர்வேத வைத்தியசாலை சுற்றுவட்டத்தில் ஆரம்பித்த பேரணி கம்பல் இடத்தை நோக்கி நகர்ந்தது. ஐக்கிய தேசிய முன்னணியின் ஆதரவாளர்கள் பொரளை சந்தியில் வைத்து பேரணியுடன் இணைந்து கொண்டனர். போது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் தலைமயில் இடம்பெற்ற இப்பேரணியில் ஜேவிபி தலைவர் சோமவன்ச அமரசிங்க , ரில்வின் சில்வா , அனுரகுமார திஸாநாயக்க , எதிர் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க , திஸ்ஸ அத்தநாயக்க , கரு ஜெயசூரிய உட்பட கட்சிகளின் பெரும் புள்ளிகள் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக