ஞாயிறு, 3 ஜனவரி, 2010

இ.தொ.கா.விலிருந்து யார் விலகினாலும் மலையக மக்களின் வாக்கு ஜனாதிபதிக்கே: அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்..!!

இ.தொ.கா.விலிருந்து யார் விலகிச் சென்றாலும் மலையக மக்கள் இத்தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கே வாக்களிப்பார்கள் என இ.தொ.கா. பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இ.தொ.கா.வைச் சேர்ந்த இருவர் ஐ.தே.கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர். இதனால் இ.தொ.கா.விற்கு எதுவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.
இ.தொ.கா. ஒரு ஆலமரம். அதனை எந்தச் சக்தியாலும் வீழ்த்த முடியாது. ஜனாதித் தேர்தலில் இ.தொ.கா. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பது என தீர்மானம் நிறைவேற்றிய போதும், அதற்கு முன்னரும் கூட எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தவர்கள் கட்சி மாறியதும் இ.தொ.கா.வை விமர்சிக்கின்றனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த 4 வருடகால ஆட்சியில் மலையகப் பகுதியில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக