ஞாயிறு, 3 ஜனவரி, 2010
புளொட் தோழர் சுந்தரத்தின் 28வது ஆண்டு நினைவுநாள் அனுஷ்டிப்பு..!!
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்தாபகர்களுள் ஒருவரும், தளபதியும், புதியபாதை ஆசிரியருமான தோழர் ச.சிவசண்முகமூர்த்தி (சுந்தரம்) அவர்கள் புலிகளின் தலைவர் பிரபாகரனால் படுகொலை செய்யப்பட்ட 28வது வருட நினைவுநாள் இன்றாகும். அன்னாரின் நினைவுகூரல் நிகழ்வுகள் புளொட் அமைப்பின் மாவட்ட காரியாலயங்களில் இன்று நடைபெற்றுள்ளது. சிறந்த தலைமைப் பண்பும், துணிச்சலும், போராட்ட தெளிவும் மிக்க பொதுவுடைமைவாதியான சுந்தரம் அவர்கள் 02.01.1982ல் யாழ்ப்பாணம் சித்திரா அச்சகத்தில் ~~புதியபாதை~~ பணியில் ஈடுபட்டிருந்த போது, அச்சகத்தின் பின்புறமாக மறைந்திருந்த பிரபாகரனால் கோழைத்தனமாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இதுவே விடுதலைப் போராட்ட வரலாற்றில் நடைபெற்ற முதலாவது சகோதரப் படுகொலை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக