வெள்ளி, 1 ஜனவரி, 2010

கொள்ளையில் ஈடுபட முயன்ற மூன்று இலங்கையர்கள் லண்டனில் கைது..!!

இங்கிலாந்தில் ஆயுதங்களைக் கொண்டு பணக்கொள்ளைச் சம்பவமொன்றில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அப்பகுதி ஹோட்டலொன்றில் தங்கியிருந்த போது ஹோட்டல் உரிமையாளர் சந்தேகம் கொண்டு அறிவித்தமையைத் தொடர்ந்து அவர்கள் பொலீசாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர். வடக்கு லண்டன் டெஸ்டன் பகுதியிலுள்ள பண்ணையொன்றின் காசாளரிடம் பணம் கொள்ளையிட முற்பட்ட நிலையில் பின்னர் தப்பிச் சென்றிருந்தனர். பொலிசார் ஹெலிகொப்டரில் வந்து இவர்களைக் கைது செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக