வியாழன், 21 ஜனவரி, 2010

மன்னார் மாவட்டத்தில் கைத்தொழில் பயிற்சி பெற்ற 400 பேருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார்..!!

இன்று (21) பிற்பகல் ஆங்கில கற்கை மையத்தின் கேட்போர் கூடத்தில் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் காண்டீபன் தலைமையில் நடைபெற்ற கைத்தொழில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் வைபவதிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இவ் வைபவத்திற்கு தலைமைதாங்கி உரைநிகழ்த்திய காண்டீபன் 2001ஆம் ஆண்டிலிருந்து வேலைவாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்குத் தொழிற்பயிற்சி வழங்கப்பட்டதுடன் மாதாந்தம் 4000 ரூபா உதவிப் பணமாக வழங்கப்பட்டதாகவும் இப்பயிற்சி பெற்றவர்களில் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளதாகவும் இத்தகைய வாய்ப்பை ஏற்படுத்தித்தந்த சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சான்றிதழ்களை வழங்கி உரைநிகழ்த்துகையில் தம்மைப் பொறுத்தவரை சொல்வதையே செய்வதாகவும் செய்வதையே சொல்வதாகவும் தேர்தலுக்கு முன்னொன்றும் தேர்தலுக்குப் பின்னொன்றுமாகப் பேசும் சந்தர்ப்பவாதியல்ல எனத் தெரிவித்ததுடன் மன்னார் மாவட்டத்தில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். தற்போது பல சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் சூரியனையும் சந்திரனையும் பிடித்துத் தருவதாகக் கூறிவது போன்று போலியான வாக்குறுதிகளை தாம் வழங்கப்போவதில்லை என்றும் நடைமுறைச்சாத்தியமான மக்களின் நலன்களுக்கான வாக்குறுதிகளையே வழங்கி அவற்றை நிறைவேற்றி வருவதாகத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கைத்தொழில் பயிற்சி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவித் தொகையை அதிகரித்து வழங்குவது குறித்து பரிசீலிப்பதாகவும் தெரிவித்தார். இதேவேளை பயிற்சி வழங்கிய ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களது கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அமைச்சர் அவர்கள் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக