சனி, 2 ஜனவரி, 2010
புளொட் அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர் கந்தசாமி விஜயன் காலமானார்..!!
வவுனியா நொச்சிமோட்டையைச் சேர்ந்தவரும், கோவில்புதுக்குளத்தில் வசித்து வந்தவருமான கந்தசாமி விஜயன் இன்றுகாலை (01.02.2010) சுகயீனம் காரணமாக காலமானார். அன்னார் புளொட் அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினராவார். 1984கள் தொடக்கம் புளொட் உறுப்பினராக செயற்பட்டு வந்த இவர், வவுனியா மாவட்டத்திலேயே அதிககாலம் சேவையாற்றியுள்ளார். பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மனந்தளராது கட்சியைப் பலப்படுத்துவதிலும், மக்கள் சேவையிலும் முன்நின்று உழைத்த அவர், 1990களில் வவுனியா பிரதேசம் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த வேளையில் புளொட் அமைப்பினர் முன்னெடுத்த வவுனியாவின் மீள்கட்டுமானம், மீள்குடியமர்வு போன்ற அரும்பணிகளில் கூடுதலான பங்கினை ஆற்றியவர். அன்னாரின் பூதவுடல் கோவில்புதுக்குளம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதி நிகழ்வுகள் கோவில்குளம் இந்து மயானத்தில் நாளை பிற்பகல் 1மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக