வெள்ளி, 1 ஜனவரி, 2010

தென்னாசிய நாடுகளில் இலங்கைப் பத்திரிகையாளர்களே 2009ல் அதிகளவு பாதிப்பு..!!

தென்னாசிய நாடுகளில் இலங்கைப் பத்திரிகையாளர்களே 2009ம் ஆண்டில் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தென்னாசிய ஊடக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தென்னாசிய சுதந்திர ஊடக அமைப்புடன் (சவ்மா) இணைந்து கடந்த செவ்வாய்க்கிழமை பாகிஸ்தானில் வெளியிட்டுள்ள தனது 7வது ஊடக கண்காணிப்பு அறிக்கையிலேயே ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது. இந்து பத்திரிகையாசிரியர் என்.ராமைத் தலைவராகக்கொண்ட தென்னாசிய ஊடக ஆணைக்குழு 2009ம் ஆண்டில் 12பத்திரிகையாளர்கள் பிராந்தியத்தில் கொல்லப்பட்டனர் எனத் தெரிவித்துள்ளது. சகல விதத்திலும் நோக்கும்போது இலங்கைப் பத்திரிகையாளர்களே 2009ம் ஆண்டில் மிகமோசமான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். உயிர்அச்சம் காரணமாகப் பல சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் நாட்டைவிட்டுத் தப்பியோடியுள்ளனர் என ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இலங்கையின் தலைசிறந்த நன்கு அறியப்பட்ட பத்திரிகையாளர்கள் லஸந்த விக்கிரமதுங்க பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டதும், கடத்தல் பாணியில் என்.வித்தியாதரன் கைதுசெய்யப்பட்டமையும், பயங்கரவாதக்குற்றச்சாட்டின் பெயரில் ஜே.எஸ்.திஸநாயகத்திற்கு விதிக்கப்பட்ட 20வருடச் சிறைத்தண்டனையும் ஊடகசுதந்திரம் மிகவும் கீழ்நிலைக்கு இலங்கையில் சென்றுவிட்டதைப் புலப்படுத்தியுள்ளன என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக