திங்கள், 28 டிசம்பர், 2009

கிரடிட் கார்ட்மோசடி செய்த இலங்கை வாலிபர் சென்னையில் கைது..!

போலிகிரடிட் கார்டை பயன்படுத்தி லட்சக்கணக்கில் பணமோசடி செய்த இலங்கை வாலிபர் ஒருவரை சென்னை பொலிஸார் நேற்றுமுன்தினம் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள ஆக்சிஸ் வங்கியின் மோசடி தடுப்பு பிரிவு மனேஜர் அசோக்குமார் பொலிஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து போலிகிரடிட் கார்டுகளை பயன்படுத்தி சென்னையில் லட்சக்கணக்;கில் பணம் மோசடி நடப்பதாகவும் அதில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக் கொண்டார் இந்த முறைப்பாட்டை தொடர்ந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிஸாருக்கு உத்தரவிட்டது. அவர்களே நேற்றுமுன்தினம் ஒருவரை கைது செய்துள்ளனர். அவரது பெயர் விஜயகாந்தி (வயது29) என்றும் இலங்கையைச் சேர்ந்த அவர் சென்னை வளரசவாக்கத்தில் தங்கியிருப்பதும் தெரிய வந்தது. பிஏ பட்டதாரியான அவர் போலிகிரடிட் காட்டுகள் மூலம் லட்சக்கணக்கில் பலதரப்பட்ட பொருட்கள் வாங்கி மோசடியில் ஈடுபட்டு இருப்பதும் கண்டறியப்பட்டது. கைது செய்யப்பட்ட அவர் தங்கியிருந்த வீட்டில் இருந்து 22வகையான வங்கி போலி கிரடிட் கார்டுகள் கைப்பற்றப்பட்டது. மேற்படி நபர் சென்னை எழும்பூர் பாந்தியன் ரோட்டில் உள்ள பிரபல கணனி விற்பனை நிறுவனம் ஒன்றில் போலி கிரடிட் கார்ட் மூலம் கணனி வாங்க முயற்சித்துள்ளார். ஆனால் அவர் கொடுத்த கிரடிட் கார்டுகளில் பணம் போதாதென அவை நிராகரிக்கப்பட்டுக் கொண்டே இருந்ததால் அவர் மீது கடைக்காரர் சந்தேகம் கொண்டுள்ளனர். இதையுணர்ந்த வாலிபர் அவ்விடத்தை விட்டு நகர முயற்சித்த போது அவரை மடக்கிபிடித்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் பொலிஸாரிடம் அந்நபர் ஒப்படைக்கப்பட்டுள்ளார் இப்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக