திங்கள், 28 டிசம்பர், 2009
புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் கே.பி செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்பாரென செய்திகள்..!!
புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் (கே.பி) வெகுவிரைவில் செய்தியாளர் சந்திப்பொன்றில் பங்கேற்கவிருப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அடுத்தவாரத்தில் குமரன் பத்மநாதன் செய்தியாளர் சந்திப்பொன்றில் பங்கேற்பாரெனவும், இதன்போது புலம்பெயர் தமிழர்களிடம் பணம் திரட்டப்பட்ட விதம், கப்பம் கோரப்பட்ட விதம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த தகவல்களை அவர் வெளியிடுவாரென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக