திங்கள், 28 டிசம்பர், 2009
வவுனியா இடைதங்கல் முகாம் விரைவில் மூடப்படவுள்ளது -மனித உரிமைகள் அமைச்சர்..!!
வவுனியா மெனிக்பாம் அகதி முகாம்கள் வெகுவிரைவில் மூடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்தோர் அனைவரும் எதிர்வரும் ஜனவரி மாதம் 31ம் திகதி மீள்குடியமர்த்தப்படவுள்ள நிலையில் இந்த முகாம்கள் மூடப்படும் என அவர் குறிப்பிட்டள்ளார் தற்போது மெனிக்பாமில் 80ஆயிரம் பேரே இடம்பெயர்ந்த நிலையில் தங்கியுள்ளதாகஅவர் தெரிவித்துள்ளார் கடந்த வியாழக்கிழமையன்று சுதந்திரமான நடமாட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் 80ஆயிரம் பேரே முகாம்களுக்கு திரும்பினர் இதில் 72ஆயிரம்பேர் தமது உறவினர்களின் வீடுகளுக்கு சென்று திரும்பினர் என்றும் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக