வியாழன், 3 டிசம்பர், 2009

யாழ் பஸ் பயண அலுவலகம் தேக்கம்காடு விளையாட்டு மைதானத்திற்கு மாற்றம்!!

வவுனியா ஈரற்பெரியகுளம் சோதனைச் சாவடிக்கு அருகாமையில் இயங்கிவந்த யாழ்ப்பாணம் செல்வோருக்கான பஸ் பயண அலுவலகம் பல்வேறு கோரிக்கைகளைத் தொடர்ந்து வவுனியா நகருக்கு அருகாமையில் உள்ள தேக்கம்காடு விளையாட்டு மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. நேற்றுமுதல் யாழ்.பஸ்கள் இங்கிருந்தே புறப்படுகின்றதென வவுனியா செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரைகாலமும் ஈரற்பெரியகுளம் இராணுவ முகாமிற்கு அருகாமையிலிருந்து யாழ். பஸ்கள் புறப்பட்டன. இது மக்களுக்கு பலத்த அசௌகரியத்தை ஏற்படுத்தி இருந்தது. இதுவரை காலமும் மக்கள் அனுபவித்த அசௌகரியங்கள் இனிமேலும் இருக்காது என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக