திங்கள், 28 டிசம்பர், 2009

ஈரானில் பின்லேடன் மனைவி, பிள்ளைகள் கைதுசெய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர் - ஒசாமாவின் நான்காவது மகன்

ஈரானில் பதுங்கியிருந்த சர்வதேச பயங்கரவாதி ஒஸாமா பின்லேடனின் மனைவி மற்றும் அவரின் 5 பிள்ளைகள் (Saad வயது 29, Uthman வயது 25, Fatima வயது 22, Hamza வயது 20, Bakr வயது 15,) கைது செய்யப்பட்டுள்ளனர். 6 வது பிள்ளை Iman, வயது 17 என்பவர் ஈரானில் உள்ள சவுதிஅரேபிய தூதரகத்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார்.பின்லேடனுக்கு பல மனைவிகள் மற்றும் குழந்தைகள் உள்ளனர். அவர்களில் ஒரு மனைவியும், சில குழந்தைகளும், பேரக் குழந்தைகளும் முன்பு ஆப்கானிஸ் தானில் பின்லேடனுடன் வசித்து வந்தனர்.நியூயோர்க் இரட்டைக்கோபுர தாக்குதலுக்குப் பின்னர், ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் தாக்குதல் தொடங்கியதும் அவர்கள் அங்கு இருந்து காணாமல் போயிருந்தனர்.இந்நிலையில் ஏறக்குறைய எட்டு ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் தெஹ்ரானில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை ஈரான் அரசு கைது செய்து, ரகசிய இடத்தில் வீட்டுக்காவலில் வைத்து இருப்பதாக ஒசாமாவின் நான்காவது மகன் Omar bin Laden வயது 29, சவுதி பத்திரிகை Asharq Al-Awsat ற்கு தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக