மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 45வயது பெண் தாதியொருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்றிரவு மரணமானார். இவரது குடும்பத்தில் கணவர் மற்றும் 5வயது குழந்தை அடங்களாக 3பேர் டெங்குகாய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்ததாகவும் தற்போது குழந்தை மட்டும் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. மரணமடைந்த தாதி உத்தியோகத்தரின் இரத்த மாதிரி உறுதிப்படுத்துவதற்காக வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படவிருப்பதாக பிராந்திய தொற்று நோய் தடுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.தட்சணாமூர்த்தி தெரிவித்தார். அவரது தகவலின்படி தடுப்பு பிரிவு இறுதியாக வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 8பேர் தேசிய மட்டத்தில் 168பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 15ஆயிரத்து 929பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கள், 21 டிசம்பர், 2009
மட்டக்களப்பில் டெங்கு காய்ச்சல் பெண்தாதி ஒருவர் மரணம் !!

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக