திங்கள், 21 டிசம்பர், 2009

கனடாவிலும், அவுஸ்திரேலியாவிலும் குடியேறவென கூட்டிச் செல்லப்பட்ட ஓசியானிக் வைகிங் கப்பலிலிருந்த இலங்கை அகதிகள் 15பேர் (புகைப்படங்கள் இணைப்பு)

ஓசியானிக் வைகிங் கப்பலிலிருந்த இலங்கை அகதிகளில் 15பேர் நேற்று கனடாவிலும், அவுஸ்திரேலியாவிலும் குடியேறுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இரு மாதங்களின் பின்னரே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் இந்தக் குடியேற்றம் தொடர்பில் அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சு எக்கருத்தினையும் வெளியிடவில்லை. இந்தோனேசியக் கடற்பரப்பில் வைத்து விபத்துக்கு உள்ளானநிலையில் 78அகதிகள் கடந் அக்டோபர் மாதம் ஓசியானிக் வைகிங் கப்பல்மூலம் காப்பாற்றப்பட்டிருந்தனர். இந்நிலையில் அவர்கள் இந்தோனேசியக் கடற்பரப்பில் வைத்து காப்பாற்றப்பட்டதன் காரணத்தினால் இந்தோனேசியாவிற்கே அனுப்பப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கப்பலிலிருந்து தரையிறங்க மறுத்தனர். இந்நிலையில் 12வாரங்களுக்குள் குடியமர்த்துவதாக அவுஸ்திரேலியாவினால் உறுதியளிக்கப்பட்ட பின்னர் இந்தோனேசியாவில் தரையிறங்கிய அவர்கள் படிப்படியாக குடியமர்த்தப்படுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக