நான்கு வருட நல்லாட்சி மூலம் முஸ்லிம்களின் எதிர்பார்ப்பினை உணர்ந்து செயற்பட்டவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே. அவரை மீண்டும் ஜனாதியாக்க முஸ்லிம் சமூகம் பூரண ஆதரவினை வழங்குவது உறுதியென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். தமது சுய நலத்துக்காக முஸ்லிம்களை வழிநடத்த முயலும் ரவூப் ஹக்கீம் தொடர்ந்து அமைச்சராக இருந்தும் முஸ்லிம் சமூகத்துக்காக ஒரு பாடசாலையையோ அல்லது ஒரு மலசல கூடத்தைத் தானும் அமைத்துக் கொடுத்த தில்லையெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இராணுவ ஆட்சியொன்றை அமைத்து நாட்டைக் குட்டிச்சுவராக்க முயலும் சரத் பொன்சேகா முஸ்லிம்களை அடிமைச் சூழலிலேயே வழிநடத்துவார். அதற்கு எவரும் துணைபோகக் கூடாதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் வட மாகாணத்திற்கான வருடாந்த மாநாடு புத்தளம் ஆலங்குடாவில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேலும் தெரிவிக்கையில் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், மங்கள சமரவீர போன்றோர் தற்போது பொன்சேகாவிடம் சோரம் போயுள்ளனர். தமது பதவிக்காலத்தை மேலும் நீடிப்பதற்காகப் போராடிய சரத் பொன்சேகா ஆறு மாதத்தில் நிறைவேற்று ஜனாதிபதிப் பதவியை விட்டுக்கொடுப்பதென்று கூறுவது எத்தகைய பொய். அவருக்குப் போய் ரவூப் ஹக்கீம் ஆதரவு வழங்குவது விந்தையிலும் விந்தை எனவும் தெரிவித்தார்..
புலிகளுடன் உடன்படிக்கை செய்து முஸ்லிம்களை ஏமாற்றியவர் ஹக்கீம் முஸ்லிம்கள் அவரை ஆதரிக்கக் கூடாது – பசில் அனைத்து அரசாங்கங்களிலும் அமைச்சராக விருந்து பிரபாகரனுடன் உண்டு குடித்து உறவாடி சமாதானப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்ட ரவூப் ஹக்கீமிற்கு வடக்கு முஸ்லிம்களை மீள்குடியேற்ற முடியாமற் போனதென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.புத்தளம் ஆலங்குடாவில் நேற்று நடைபெற்ற அ. இ.மு.கா. கட்சியின் மாநாட்டில் சிறப்பதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தமதுரையில் மேலும் தெரிவிக்கையில்;
புலிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொண்டு முஸ்லிம் மக்களை ஏமாற்றிய மு. கா. தலைவருக்கு ஒருபோதும் முஸ்லிம்கள் ஆதரவளிக்க கூடாது. உங்கள் எதிர்காலத்தை சபீட்சமயமாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதிக்கு உங்கள் பூரண ஆதரவினை வழங்குங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக