நகர அபிவிருத்தி திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட ரூபா 1500 மில்லியன் பெறுமதியான முதற்கட்ட வவுனியா நகர அபிவிருத்தி திட்டத்திற்கான வரைபடம் உட்பட ஆவணங்களை அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று வவுனியா அரச அதிபர் சார்ள்ஸ் மற்றும் வவுனியா நகர சபைத் தலைவர் ஜி. எஸ். நாதன் ஆகியோரிடம் கையளித்தார்.
வவுனியா நகரை நவீன மயப்படுத்தவும், நகரை அண்டிய பகுதியில் கிரிக்கெட் அரங்கொன்றை அமைக்கவும், நீச்சல் தடாகம் மற்றும் ரயில் நிலையத்தையும், நகர மத்தியை இணைக்கும் பிரதான பாதையின் இருமருங்கிலும் நவீன கடைத் தொகுதி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. எனக்குறிப்பிட்ட அமைச்சர், ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக