சனி, 5 டிசம்பர், 2009
தமிழ்க்கூட்டமைப்பின் சார்பில் தமிழ் வேட்பாளரை நிறுத்தாவிடில் சுயேட்சையாக போட்டியிடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவிப்பு..
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்க்கூட்டமைப்பின் சார்பில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு முடிவு செய்திருப்பதாக தமிழ்க்கூட்டமைப்பு எம்.பி கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ்க்கூட்டமைப்பின் சார்பில் தமிழ் வேட்பாளர் ஒருவரும் நிறுத்தப்படாத பட்சத்தில் தானே சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தமிழ்க்கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளர் எவரையும் நிறுத்துவதா என்பது குறித்த இறுதித் தீர்;மானம் எதிர்வரும் 8ம் திகதி கட்சியினால் எடுக்கப்படுமென்றும், இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படாத பட்சத்தில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பிலான இறுதி முடிவினை எதிர்வரும் 17ம் திகதிக்கு முன்னர் கட்சி அறிவிக்குமென்றும் கட்சி வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக