சனி, 5 டிசம்பர், 2009
முகாம் மக்களுக்கு நடமாட்ட சுதந்திரம் வழங்கியமைக்கு யூ.என்.எச்.சீ.ஆர் பாராட்டு!
முகாம் மக்களுக்கு நடமாட்ட சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளமையை ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரம் (யூ.என்.எச்.சீ.ஆர்) பாராட்டியுள்ளது. சுவிஸ்லாந்தின் ஜெனீவா நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயப் பேச்சாளர் அன்ட்ரிச் மகேசிக் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளானவர்கள் சுதந்திரத்தை அனுபவிப்பதை தமது பிரதிநிதிகள் கண்காணித்து வருவதாகவும், அவர்களின் கண்காணிப்புக்கமைய பெரும்பாலானோர் தமது பல்வேறு பொருட்களை முகாம்களிலேயே விட்டுவிட்டு வெளியேறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய அவர்கள் மீள முகாம்களுக்கு வருகின்ற எதிர்பார்ப்புடன் இருக்கின்றமை தெரியவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக