சனி, 26 டிசம்பர், 2009
முஸ்லிம் மக்களின் வாக்குகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே -பேரியல் அஸ்ரப்
முஸ்லிம் மக்களின் வாக்குகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே கிடைக்கும் அதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறோமென அமைச்சர்கள் பௌஸி, பேரியல் அஷ்ரப் ஆகியோர் தெரிவித்துள்ளனர். சிறுசிறு கட்சிகள் மற்றும் சுயாதீனமான வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தமது பெறுமதியான வாக்குகளை குப்பைத் தொட்டிக்குள் போடுவதற்கு விரும்பமாட்டார்கள் எனவும் அமைச்சர் பேரியல் அஷ்ரப் தெரிவித்துள்ளார். இதனால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்காக வாக்குகளில் பாதிப்புகள் ஏற்படுமா என வினவியபோதே அமைச்சர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். கொழும்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை அஸாத் சாலியும் எம்மோடு இணைந்துள்ளார். எவ்வித சந்தேகமுமின்றி 70வீத வாக்குகளால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெறுவது உறுதியெனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக