சனி, 26 டிசம்பர், 2009

வன்னிக்கு மின்சாரம் - ஜனாதிபதியின் ஆலோசகர் சந்திரா பெர்ணாண்டோ

வன்னிக்கு பலவருடங்களாக மின்சாரம் இல்லாமல் வாழ்ந்த மக்களுக்கு இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. யுத்த காலத்தின்போது செயலிழந்த நகர மின்சார விநியோகம் சீர்செய்யப்பட்டு பலவருட காலமாக பல கிராமங்களில் மின்சாரமே இல்லாத மக்கள் இப்பொழுது மின்சாரத்தைப் பெற்றுள்ளனர். பொதுவாக முல்லைத்தீவு பிரதேச கிராமங்கள், கிளிநொச்சி பிரதேச கிராமங்கள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கிராமிய மின்சார யுகம் என்ற தொனியில் வழங்கப்படும் மின்சாரம் மூலமாக பல சிறு கிராமங்கள் அபிவிருத்தியடைந்துள்ளன. வடக்கின் வசந்தம் தொனிப்பொருளில் இப்பொழுது வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேசத்துக்கும், முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேசத்துக்கும் கிளிநொச்சி நகரத்துக்கும் உயர்அழுத்த மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று மன்னார் பிரதேசத்திலுள்ள கிராமங்களுக்கும் தாழ்அழுத்த மின்சார விநியோகம் வழங்கப்பட்டு அங்குள்ள மக்களின் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இதைவிட மன்னார் - மாந்தை மேற்கு காத்தான்குளம் கிராமங்களுக்கும் ஏற்கனவே மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை கிராமிய மின்சார யுகம் மூலம் கரைச்சி செயலாளர் பிரிவுக்கும் பூநகரி செயலாளர் பிரிவுக்கும் மின்சாரம் வழங்க நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. இவ்வாறு வடக்கு அபிவிருத்திகான ஜனாதிபதியின் ஆலோசகர் சந்திரா பெர்ணாண்டோ அவர்கள் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக