திங்கள், 28 டிசம்பர், 2009
குண்டு துளைக்காத டீஆறு கார் இரண்டை ஜனாதிபதி கொள்வனவு !!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரச்சாரங்களுக்கு சென்று வரவென 106மில்லியன் ரூபா பெறுமதியான குண்டு துளைக்காத புதிய கார்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் பிரச்சாரமும் சூடுபிடித்து வருகிறது. இந்த தேர்தல் பிரச்சாரங்களிற்காக தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குண்டு துளைக்காத புதிய கார்கள் இரண்டை கொள்வனவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. டீஆறு வகையிலான இக்கார்கள் நேற்றுக்காலை 9.30மணியளவில் மலேசியன் எயார்லைன்ஸ் மூலம் பிராங்பார்டிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. ஒருகாரின் விலை வரி அனைத்தையும் உள்ளடக்கி 53 மில்லியன் ரூபா என சுங்கவரி திணைக்கள பேச்சாளர் தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய தகவலின்படி இவ்விருகார்களும் சுங்கவரித்துறைக்கு கொண்டு செல்லப்படாமல் ஜனாதிபதி செயலாளரால் நேரடியாக விமான நிலையத்திலிருந்து அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக