திங்கள், 28 டிசம்பர், 2009

2004ம் ஆண்டு சுனாமியின்போது மாத்தறை சிறையில் இருந்து காணாமற்போனவர் கைது !!

2004ம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தின்போது மாத்தறை சிறைச்சாலையிலிருந்து காணாமற் போனதாக சந்தேகிக்கப்படும் கைதியொருவரை தற்போது பொலீசார் கைதுசெய்துள்ளனர். குருநாகல் மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் ஆங்கிலம் மற்றும் யோகா ஆகியவற்றைப் பயிற்றுவித்து வந்த நிலையிலேயே அவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். போலியான பெயர்கொண்டு போலியான அடையாள அட்டையுடன் கைதுசெய்யப்பட்டுள்ள நபர் வாகனக் கொள்ளையொன்றில் குற்றவாளியாகக் கருதப்பட்டு மாத்தறை சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்துள்ளார். 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின்போது மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் சிலரும் உயிரிழந்திருந்தனர். இவ்வாறு உயிரிழந்தவர்களின் பட்டியலில் கைதுசெய்யப்பட்டுள்ள நபரின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் ஐ.எம்.கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக