இந்தோனேசியா மராக் துறைமுகத்தில் தரித்துநிற்கும் ஓசியானிக் வைகிங் கப்பலிலுள்ள இலங்கை அகதிகள் நேற்று இந்தோனேசியக் கடற்படையினரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இவர்களில் 06பேர் இவ்வாறு தாக்கப்பட்டதாக கப்பலிலுள்ள அலெக்ஸ் என்கிற சஞ்சீவ் தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் மாதத்தில் இவர்கள் சென்றிருந்த கப்பல் இந்தோனேசிய கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட தினத்திலிருந்து கப்பலிலிருந்து வெளியேற இவர்கள் மறுத்து வருகின்றனர். இந்நிலையில் தம்மை தாக்கிய இந்தோனேசிய கடற்படையினர் அதனைத் தடுக்க முனைந்த ஐவரையும் தாக்கியதாக அலெக்ஸ் என்கிற சஞ்சீவ மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை குறித்த கப்பலில் நோய்வாய்ப்பட்ட நிலையில் கடந்த புதன்கிழமை வைத்தியசாலையில் உயிரிழந்த இலங்கையரின் சடலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக