சுனாமி - நாளை 5ம் ஆண்டு நினைவு தினம்,
சுனாமி பேரலைகளில் சி்க்கி பலியானவர்களுக்கு நாளை 5ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்படுகிறது.
கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுனாமி பேரலை தாக்கி இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் பெரும் உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டது.
இப்பேரலையில் பலியானவர்களுக்கு நாளை உலகம் முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட இருக்கின்றது,கல்லடி நாவலடியில் நiசுனாமி பேரலை தாக்கியதில் உலகு முழுவதும் உயிர் நீத்தவர்களுக்காக செலுத்தப்பட இருக்கும் அஞ்சலி நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து அஞ்சலி செலுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாணசபையில் நேற்று நினைவஞ்சலி செலுத்தபடப்டது.
கிழக்கு மாகாண சபையில் கடந்த வியாளன்(நேற்று) அன்று மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது, பிரதம செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் செயலக செயலாளர்கள், ஊழியர்கள் மற்றும் ஏனைய அமைச்சுக்கான சேயலாளர்கள் ஊழியர்களும் கலந்து இத்தினத்தை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக