சனி, 12 டிசம்பர், 2009

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று யாழ் விஜயம் !

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். அவருடன் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசனும் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளார். இருவரும் முதலில் யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயம் பின்னர் நாகதீப விகாரை ஆகியவற்றுக்கு சென்று வழிபாடுகளில் இவர்கள் ஈடுபட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகத்துடனான சந்திப்பில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் பல்வேறு சந்திப்புக்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு திரட்டும் வகையிலேயே இவர்களின் யாழ். விஜயம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக