வியாழன், 31 டிசம்பர், 2009
திருமலைக் கடற்பரப்பில் மீன்பிடித்தடைகள் முற்றாக நீக்கம் - கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்கிரம..!!
திருமலைக் கடற்பரப்பில் அனைத்து மீன்பிடித் தடைகளும் முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்கிரம தெரிவித்துள்ளார். மீனவச் சங்கங்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் இன்றுகாலை நடத்திய சந்திப்பின்போதே இதனைத் தெரிவித்துள்ளார். எனவே அனைத்துப் பகுதிகளிலும் மீன்பிடிப்பதற்கு மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் இதுவரை காலமும் திருமலை மீனவர்கள் எதிர்நோக்கிவந்த பல்வேறு கஷ்டங்கள் நீங்கியுள்ளன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக