சனி, 5 டிசம்பர், 2009

மீள்குடியமர்வுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்காலிக முகாம்களில் வசிப்போர் கண்ணிவெடியகற்றலின் பின் மீள்குடியமர்த்தப்படுவர் -அரசாங்கம் !!

முகாம்களில் தங்கியிருந்த இடம்பெயர்ந்த மக்களில் பெரும்பான்மையானோர் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளபோதும் அவர்கள் தற்போதும் இடைத்தங்கல் முகாம்களிலேயே இருந்து வருவதாகவும் கண்ணிவெடி அகற்றும் பணி முடிவடையும்வரை அவர்கள் இந்த இடைத்தரிப்பிடங்களிலேயே இருப்பார்கள் என்றும் அரசாங்கம் நேற்று தெரிவித்துள்ளது. பிரதான முகாம்களிலிருந்த இடம்பெயர்ந்த மக்களில் 70 சதவீதமானோர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ, மனித உரிமைகள் விவகார அமைச்சர் மகிந்த சமர சிங்க கூறியுள்ளார். அவர்களில் அதிக தொகையானோர் தற்போதும் தற்காலிக வசதிகளுடன் வைக்கப்பட்டுள்ளனர். கண்ணிவெடிகள் அகற்றப்படும்வரை இதுவொரு இடைத்தங்கல் முகாமாகும். கிளிநொச்சி, முல்லைத்தீவில் கணிசமான எண்ணிக்கையானவர்கள் உள்ளனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இடர்முகாமைத்துவ மற்றும் மனிதஉரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக